﻿"(நபியே!) நீர் சொல்வீராக: ""காஃபிர்களே!"
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
"இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்."
"அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்."
"மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்."
"உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."""
